நடிகையாக வாய்ப்பு கேட்டதால், பலர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டனர் - பிரபல நடிகை பகீர் பேட்டி! - Seithipunal
Seithipunal


நடிகையாவதற்காக தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா. தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் இவர் நடித்துள்ளார். இவர் இந்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். சமூக வலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகையாவதற்காக தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஷெர்லின் சோப்ரா கூறும்போது, "நான் பட வாய்ப்பு கேட்டு சென்றபோது சில இயக்குனர்கள் என்னிடம் மிக மோசமாக நடந்து கொண்டனர், ஆபாசமாக பேசினார்கள். ஒரு இயக்குனர் என்னிடம் எல்லை மீறியபோது உங்களுக்கு திருமணமாகி விட்டது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் எனது மனைவியுடன் நான் இணக்கமாக இல்லை.

நாங்கள் ஒற்றுமையாகவும் இல்லை என்று பதிலளித்தார். இப்படி எத்தனையோ பேர் என்னை மிகவும் கஷ்டப்படுத்தினார்கள். ஒரு கட்டத்தில் எனக்கு கிட்னி பாதித்தது. குடும்பத்தினர் யாரும் கிட்னி தானம் கொடுக்க முன்வரவில்லை. மூன்று மாதங்கள் மருந்து சாப்பிட்டு குணமானேன். அப்போதிலிருந்து எனக்கு உதவாத குடும்பத்தினர் மீது நான் அக்கறை காட்டுவது இல்லை. இப்போதும் அவர்களை விட்டு விலகியே இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Many people misbehaved with me because I asked for an opportunity to become an famous actress informs


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->