ஓடிடியில் வெளியாகும் மார்க் ஆண்டனி - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஓடிடியில் வெளியாகும் மார்க் ஆண்டனி - எப்போது தெரியுமா?

நடிகர் விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதையடுத்து இந்தப் படம் டப் செய்யப்பட்டு கடந்த 28ம் தேதி இந்தியில் வெளியானது. இதற்கு முன்னதாக, இந்த படத்தின் இந்தி பதிப்பை வெளியிடுவதற்கு தணிக்கை குழு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் புகார் தெரிவித்திருந்தார். 

அந்தப் புகாரின் அடிப்படையில் சிபிஐ, தணிக்கை குழு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 30 கோடி ரூபாயில் உருவான இந்த படம், உலகம் முழுவதும் 100 கோடி ரூபாயை கடந்து வசூல் வேட்டை நடத்தி வருவதாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, நாளை 13.10.2023 அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mark antony movie ott release tomarrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->