முதல் முறையாக அஜித்துக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்.?! அஜித்தின் அடுத்த பட அப்டேட்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் இறுதியாக எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்த வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரியில் வெளியாகியது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படம் உருவாகி வந்த நிலையில், வலிமை அப்டேட் கேட்டு ஒருவரையும் விடாமல் அஜித் ரசிகர்கள் தொந்தரவு செய்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

இந்நிலையில் அடுத்ததாக இதே கூட்டணி தொடர்கிறது. அஜித்தின் Ak 61 என்று குறிப்பிடப்படும் திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்க, எச் வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் 60% முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு மற்றும் சண்டை காட்சிகள் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகை மஞ்சு வாரியர் லீட் ரோலில் நடிக்கிறார்.

 

 நடிகர் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது இந்த படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அஜித் இருவரும் 'கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் நடித்திருந்தனர். ஆனால் இருவரும் ஜோடியாக இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஏகே 62 படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தால் இதுவே, அவர்களது முதல் படமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

May Aishwarya Rai act with ajithkumar in ak62


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->