மாஸ் அப்டேட்... கார்த்தி நடிப்பில் ''மெய்யழகன்'' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி!
Meiyazhagan movie Release Date
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த 96 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம்குமார். இவர் தற்போது கார்த்தியின் 27ஆவது திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
''மெய்யழகன்'' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
English Summary
Meiyazhagan movie Release Date