மெட்டிஒலி காயத்ரியின் அண்ணண் இவர் தானா.? ரசிகர்கள் சர்ப்ரைஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் சின்னத்திரை நடிகை காயத்ரி. அஜித் குமார் நடிப்பில் விஜய் மற்றும்  அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில்  அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமானார் காயத்ரி. அதன் பிறகு பெரிய திரையில் வாய்ப்புகள் இல்லாததால்  சின்னத்திரைக்கு வந்தவர்.

90களில் பிரபலமான  மெட்டி ஒலி  தொலைக்காட்சி தொடரின் மூலம்  சின்னத்திரையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ரோஜா என்ற தொடரும்  ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது.

மெட்டி ஒலி தொடர் கொரோனா காலகட்டத்தில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போதும் இவர் நடித்திருந்த சரோ என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது  இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் தனது அண்ணனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அதற்கு ரசிகர்கள் இவரா உங்கள் அண்ணன் நம்பவே முடியவில்லை என்று கமெண்ட் செய்துள்ளனர். ஆம், இவரது அண்ணன் சஞ்சய் அவரும் ஒரு திரைப்பட நடிகர் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாரித்து இயக்கி சிறப்பு தோற்றத்தில் நடித்த வள்ளி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் விஜயகாந்த் மற்றும் மீனா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில்  சஞ்சய் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metioli Gayatri brother shocked fans who couldnt believe it


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->