கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க இருந்தது இந்த நடிகரா.?! அநியாயமா மிஸ் பன்னிட்டாரே.?! - Seithipunal
Seithipunal


கடந்த 1989இல் ராமராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கரகாட்டக்காரன். இந்த படத்தை கங்கை அமரன் எழுதி இயக்கியிருப்பார். இதற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இதில் நடித்திருப்பார்கள். 

கரகாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் காதல், முன் விரோதம், பகை என்று பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு கதை செல்லும். 

கரகாட்டக்கார மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப் பட்டுள்ள நிலையில் இளையராஜா தனது இசையின் மூலமாக கரகாட்ட கலையை உயர்த்தி காட்டி இருப்பார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் ராமராஜனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் முதலில் நடிகர் மைக் மோகன் தான் நடிக்க இருந்ததாகவும், ஆனால் இதுபோன்ற கரகாட்டக்காரன் வேடங்களில் நடிப்பதை அவர் அவ்வளவு மரியாதையாக கருதவில்லை என்றும், எனவே அவர் புறக்கணித்ததைத் தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு ராமராஜனுக்கு கிடைத்ததாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mic Mohan Missed ramarajans karakattakaran movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->