சித்தார்த்தின் மிஸ் யூ படத்தின் டீசர் வெளியானது.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார் நடிகர் சித்தார்த். 'ஆயுத எழுத்து' என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த இவர் நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

கடைசியாக இவர் தயாரித்து நடித்த 'சித்தா' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

இதையடுத்து அவர் என்.ராஜசேகர் இயக்கத்தில் 'மிஸ் யூ' என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன் கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் வருகிற 29 ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

miss u movie teaser released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->