திரைப்படங்களே ஜாதி சண்டைகளுக்கு காரணம்.. நடிகர் டெல்லி கணேஷ் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதிவெறியால் சின்னதுரை என்ற மாணவரையும், அவரது சகோதரியையும் அவருடன் படித்த சக மாணவர்கள் வீடு புகுந்து கொடூரமாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகளும், இயக்குனர்கள், நடிகர்கள் என திரை பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்களிடையே ஜாதி மோதலுக்கு திரைப்படங்களே காரணம் என பிரபல நடிகர் டெல்லி கணேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "மாணவர்கள் அறிவாலுடன் பள்ளிக்கு செல்கின்றனர். பள்ளியில் ஜாதி சண்டை நிகழ்கிறது. பள்ளியிலேயே கத்தி, அறிவாலுடன் சண்டை போடுகிறார்கள். இதற்கெல்லாம் திரைப்படங்கள் தான் முக்கிய காரணம்.

திரைப்படங்கள் சமூகத்திற்கு நல்ல கருத்தை கூற வேண்டும். அன்பு பாசம் ஒற்றுமையை படங்களின் பேச வேண்டும். ஆனால் அதனை எல்லாம் விட்டுவிட்டு வேறு எதையோ காண்பிக்கிறார்கள். படங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது.

ஒரு கும்பல் தாக்கி படம் எடுப்பதை பார்த்து, பதிலடி கொடுக்கும் விதமாக மற்றொரு கும்பல் வேறு மாதிரி படம் எடுக்கின்றனர். எல்லோரும் வாழ்வது முக்கியம் எனவே நல்ல கதைகள் நிறைய இருக்கின்றன. அதனை திரைப்படமாக எடுக்கலாம். சினிமாத்துறையில் மாற்றம் வரவேண்டும்" என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Movies reason for caste fight Delhi Ganesh


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->