விருமன் படத்தில் இணைந்த விஜய் டிவி சீரியல் நடிகை.! வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா தயாரிக்கும் விருமன் திரைப்படத்தை முத்தையா இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். 

முத்தையா இயக்கும் இந்த திரைப்படத்தில் ஷங்கரின் இளையமகள் அதிதி நடிக்க உள்ளார். சமீபத்தில் இதன் போஸ்டர் ஒன்றில் வெளியாகி சமூக வலைதளங்களில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. 

திரைப்படத்தில் அதிதி கிராமத்து பெண்ணாக நடிக்க போகிறார். இவர் எம்பிபிஎஸ் படித்து இருப்பதால் படபடவென்று ஆங்கிலத்தில் பேசக் கூடியவர். இவர் எப்படி மதுரையைச் சேர்ந்த தமிழ் பெண்ணாக பேசுவார் என்று அனைவருக்கும் கவலை ஏற்பட்டது.

ஆனால் அதிதி மதுரை தமிழில் பேசி படக்குழுவினர் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இத்திரைப்படத்தில் தேன்மொழி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இந்த படத்தில் விஜய் டிவி சீரியல் நடிகையான மைனா நந்தினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின்போது கார்த்தியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Myna Nandhini join viruman movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->