நரி வேட்டை படத்தில் சேரனின் கதாபாத்திரம் என்ன?
narivettai movie actor seran role poster release
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் இவருக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளார்கள்.
இதைத் தொடர்ந்து டோவினோ பிருத்விராஜ் இயக்கத்தில் எல் 2 எம்புரான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. இது மட்டுமல்லாமல் அவர் அனுராஜ் மனோகர் இயக்கும் 'நரி வேட்டை' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் சேரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தமிழில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் நடிக்கும் முதல் மலையாள படம் இதுவே ஆகும்.
இந்த நிலையில், "நரி வேட்டை" படத்தில் நடிகர் சேரனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தில் சேரன் போலீஸ் அதிகாரியாக 'கேசவதாஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
English Summary
narivettai movie actor seran role poster release