தூத்துக்குடி || காதலுக்கு நோ சொன்ன சிறுமி - ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்..!
boy fire to girl body in thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டையபுரம் அருகே இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இவருடைய 17 வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்று வாலிபரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்த சிறுமி, வாலிபரிடம் நாம் இருவரும் நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று தெரிவித்தார்.

ஆனால் சந்தோஷ் தொடர்ந்து அந்த சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சந்தோஷ் மீது சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில், புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் இருதரப்பினையும் அழைத்து விசாரணை நடத்தி எழுதி வாங்கி வழக்கை முடித்தார்.
இருப்பினும், சந்தோசினால் பிரச்சனை வந்ததால் சிறுமி அவரது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில், கடந்த 23-ந்தேதி வீட்டில் சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தீ பற்றி எரிந்த நிலையில் சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் தீயை அணைத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து அளித்த தகவலின் படி எட்டையபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் 2 வாலிபர்கள் வந்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சந்தோஷ் தன்னை காதலிக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது நண்பரான முத்தையா என்பவரும் சேர்ந்து தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா உள்ளிட்ட இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
boy fire to girl body in thoothukudi