அரசுத்துறையில் வேலை - இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு..!! - Seithipunal
Seithipunal


பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறையின் கீழ் தேசிய காசநோய் ஒழிப்பு தடுப்புத் திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதியை உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வயது வரம்பு : 45 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:-

* முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் பதவிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், மருத்துவ ஆய்வக தொழில்நுப்டத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் தேவை. கணினி திறனுக்கான சான்றிதழ் படிப்பு பெற்றிருக்க வேண்டும். 

* ஆய்வக நுட்புநர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப அல்லது அதற்கு நிகரான படிப்பில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்படி முடித்திருக்க வேண்டும்.

* காசநோய் சுகாதாரப் பார்வையாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு முடித்திரு MPW/LHV/ANM/மருத்துவ பணியாளர் பணியில் அனுபவம்/ சுகாதார கல்வியில் சான்றிதழ் படிப்பு/ கவுன்சிலிங் அல்லது பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். காசநோய் சுகாதாரப் பார்வையாளர் படிப்பு மற்றும் கணினி திறனுக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

* மாவட்ட மருந்தாளுநர் பதவிக்கு பார்மஸி-யில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:-

* முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் பதவி - ரூ.19,800

* ஆய்வக நுட்புனர் பதவி - ரூ.13,000

* காசநோய் சுகாதாரப் பார்வையாளர் பதவி - ரூ.13,000

* மாவட்ட மருந்தாளுநர் பதவி - ரூ.15,000

தேர்வு செய்யப்படும் முறை:- நேர்காணல்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்)
மாவட்ட நெஞ்சகநோய் மையம்,
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி வளாகம்,
ஆசாரிபள்ளம் – 629 201, கன்னியாகுமரி மாவட்டம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2025


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in government department in kanniyakumari


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->