நயன்தாராவுக்கு அடி மேல்.. அடி.! தாங்க முடியாமல் எடுத்த அதிரடி மூவ்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கடந்த 17 வருடங்களுக்கு மேலாக இருந்து வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர்   நீண்ட காலமாக காதலித்து வந்து விக்னேஷ் சிவனை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அவர்களின் படத்தை சமூக வலைதளங்களில் பதிந்த போது அது தொடர்பாக பெரிய சர்ச்சையாகி வழக்கு விசாரணை வரை சந்திக்க வேண்டிய ஆனது. தற்போது இந்த ஜோடி பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்த கனெக்ட் என்ற திரைப்படமும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தமாக இருந்த விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்திலிருந்து கழட்டி விடப்பட்டார்.

நயன்தாராவிற்கும் கைவசம் ஜப்பான் படம் மட்டுமே இருக்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் தங்களது குலதெய்வக் கோயிலுக்கு  சென்று வழிபடாதது தான் என்று முடிவு செய்த இந்த தம்பதி தஞ்சாவூர் அருகே இருக்கும் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்திருக்கின்றனர்.

அவர்கள் இருவரும் குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது வெளியே இருந்த ரசிகர்கள்  இவர்களுடன் செல்ஃபி  எடுப்பது போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்த நயன்தாரா "ப்ளீஸ், ஒரு 5 நிமிஷம் விடுங்க.. சாமி கும்பிட்டு வந்துடறேன்" என்று  கோபத்துடன் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை யூடியூபில் வெளியாகியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara and vignsh shivan paid a visit to a temple near thanjavur for their good fortunes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->