இளவரசியாக போஸ் கொடுத்த நீலிமா ராணி.! வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரை நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நீலிமா ராணி. இவர் நடிகர் கமலஹாசன் நடிப்பில் கடந்த 1992ம் ஆண்டு வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்ததன் மூலம் பிரபல நடிகையானார்.

இவர் 50க்கும் மேற்பட்ட தமிழ் சீரியல்களிலும், சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், நான் மகன் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

சீரியலில் வில்லி, ஹீரோயின் என அனைத்து கதாபாத்திரங்களிலும் வெளுத்து வாங்கும் நடிகை நீலிமா ராணி. வாணி ராணி, தலையணை பூக்கள், அரண்மனைக்கிளி, தாமரை உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். மேலும், பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் நீலிமா ராணி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் இளவரசி போல அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இவர் துர்கா தேவி போல தாமரையில் அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neelima Rani Consive photo shoot viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->