சூர்யா 44 - சிறப்பு போஸ்டர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தப் படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் அந்தமானில் துவங்கியதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது, நடிகர் சூர்யா திரைத்துறையில் இதுவரை 27 வருடங்கள் பணியாற்றி முடிவடைந்ததால் அதைப் கொண்டாடும் வகையில், சூர்யா 44 படக்குழு சிறப்பு போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் மற்றும் வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new poster and vedio published surya 44 movie team


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->