நீதிமன்றங்களில் மனுத் தாக்கல் - தமிழக அரசுக்கு புதிய நிபந்தனை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில், "சென்னை உயர்நீதிமன்றத்தின் 'ரிட்' மனு ஒன்பதாம் விதியின்படி, ஒரு மனுவுக்கு ஆதாரமாக இணைக்கப்படும் உறுதிச்சான்று, முறையாக நோட்டரி வழக்கறிஞரின் மூலம் சான்றளிக்கப்பட வேண்டும். 

ஆனால் அரசு வழக்குகளில் நீண்டகால நடைமுறையாக, சான்றுரைப்பவரும், துணை நிலை அலுவலரும் தான் உறுதிச்சான்றின் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்த விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு எடுத்துள்ள முடிவை அரசின் கவனத்திற்கு அரசு பிளீடர் கொண்டு வந்துள்ளார். 

அதன்படி, உறுதிச்சான்றுகள், பதில் மனுக்கள், ஆதார மனுக்கள் உள்ளிட்டவற்றை சான்றளிப்பதில் 'ரிட்' மனு 9-ம் விதி கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சில உத்தரவுகளை அரசு தற்போது பிறப்பித்துள்ளது. அதாவது, அரசு, துறைத் தலைவர், ஆட்சியர் உள்ளிட்டோர், மனுவுக்கு ஆதாரமாக தாக்கல் செய்யும் ஒவ்வொரு உறுதிச்சான்றும், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளை, மற்ற கீழ்நீதிமன்றங்களில் உள்ள அரசு வழக்கறிஞர்களினால்தான் சான்றளிக்கப்பட வேண்டும். 

அந்த வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் அதில் சான்றளிக்கக் கூடாது. சான்றளிப்பவரின் கையெழுத்து, முத்திரை, பதிவு எண், முகவரி போன்றவை அதில் பதிவு செய்யப்பட வேண்டும். அரசு பிளீடர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துதர வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new restriction to tamilnadu govt for petion file to courts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->