'செவ்வந்தி' சீரியலிலிருந்து விலகிய முன்னணி கதாபாத்திரம்! காரணம் என்ன???? - Seithipunal
Seithipunal


ஜீ தமிழில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை என்ற தொடரின் மூலம் நிதின் க்ரிஷ் சின்னத்திரையில் அறிமுகமானார். செவ்வந்தி என்ற தொடரில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களால் பாராட்டப்பட்டவர்.

இந்தத் தொடரில் ஹீரோவாக  நடித்து வந்த ராகவ் என்ற கதாபாத்திரம் இறந்தது போல் காட்டப்பட்டதால் நிதின் க்ரிஷ் நடித்து வரும் கார்த்திக் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவர் செவ்வந்தி சீரியலில் இருந்து வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

இது பற்றி குறிப்பிட்டுள்ள அவர் "கனத்த இதயத்துடன் செவ்வந்தி சீரியலிலிருந்து வெளியேறுகிறேன். என்னிடம் கூறப்பட்டது போல் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. ஒரு நடிகராக  என்னுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை மேலும் புரமோஷனுக்கும் என்னை  அழைக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார். விரைவிலேயே புதிய ப்ராஜெக்ட் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

தற்போது அந்தப் பதிவு டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றி விளக்கமளித்துள்ள நிதின் க்ரிஷ் லீகல் காரணங்களுக்காக அந்தப் பதிவை நீக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் புதியதை நோக்கி நகர்ந்து செல்வதற்கான நேரம்  விரைவிலேயே இரண்டு புதிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும்  தெரிவித்துள்ளார் நித்தின் க்ரிஷ். இதிலிருந்து அவர் செவ்வந்தி சீரியலிலிருந்து விலகி விட்டார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nithin krish part away from sevanthi serial


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->