விக்ரமின் மிரட்டல் லுக் மற்றும் ரஞ்சித்தின் விஷுவல் ட்ரீட் - எப்படி இருக்கிறது "தங்கலான்" டிரைலர் ? - Seithipunal
Seithipunal


பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சியான்' விக்ரம் நடித்துள்ள "தங்கலான்" திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரில் கதாப்பாத்திரங்களின் உடை, தோற்றம், கலை மற்றும் பின்னணி இசை என்றும் அனைத்தும் மிரட்டலாக உள்ளது. 

இதில் விக்ரம் படத்தில் பேசும் ஒரு வசனமும் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. 'சாவுக்குத் துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை" என்று விக்ரம் பேசும் வசனம், அதைத் தொடர்ந்து வரும் சண்டைக் காட்சி என்று அனைத்தும் தெறிக்க விடுகிறது. 

மேலும் "தங்கலான்" திரைப்படம் ஒரு பிரம்மாண்ட படைப்பாக, அனைத்து கலைஞர்களின் கடின உழைப்பில் உருவாகியுள்ளது என்று இந்த டிரைலர் உணர்த்துகிறது. இந்தப் படத்தில் விக்ரமுடன், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஒரு பீரியாடிக் படமாக கோலார் தங்க வயலின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூன் 20ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இதன் வெளியீட்டு தேதி தள்ளிப் போன நிலையில், இன்று டிரைலர் வெளியாகி உள்ளது. 

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் "தங்கலான்" திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pa Ranjith and Vikram Visual Treat Thangalaan Movie Trailer Released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->