லியோ பட பாடல் நகல் எடுக்கப்பட்டதா? - சர்ச்சையை கிளப்பும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் அண்மையில் வெளியான திரைப்படம் 'லியோ'. இந்தப் படத்தின் ‘ஆர்டனரி பர்சன்’ என்கிற பாடல், ஐரோப்பிய இசையமைப்பாளர் ஒட்னிகா என்பவரின் ஆல்பத்தில் இருந்து வேர் ஆர் யூ’ என்ற பாடலை நகல் எடுத்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

இதற்கு ஒட்னிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, 'நண்பர்களே, 'லியோ' திரைப்படம் குறித்து நீங்கள் எனக்கு அனுப்பிய மெசேஜ்களுக்கு நன்றி. 

மெயில், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்து தளங்களிலும் அந்த பாடலைக் குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகிறீர்கள். எல்லாவற்றையும் பார்த்தேன். அவற்றிற்கெல்லாம் தனித்தனியாக என்னால் பதில் சொல்ல இயலவில்லை. 

இந்த சர்ச்சைகள் குறித்து எனக்குத் தெளிவாக எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்கச் சிறிது நேரம் கொடுங்கள். அதுவரை நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples create controversy about leo movie song


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->