சுவரேறி குதித்து கவுதமி வீட்டுக்கு வந்த இளைஞர்.! விசாரணையில் சிரிப்பலை.!
police visit to gowthami house
மதுபோதையில் இளைஞர் ஒருவர் நடிகை கவுதமியின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் நடிகை கவுதமியின் வீடு இருக்கின்றது. இன்று காலை இளைஞர் ஒருவர் அவரது வீட்டில் சுவர் ஏறி குதித்து உள்ளார். அவரைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக ஓடிச் சென்று அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளது.
காவல்துறையினருக்கு உடனே இது குறித்து தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் கௌதமியின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் இளைஞரிடம் விசாரணை நடத்திய போது அவருடைய பெயர் பாண்டியன் என்பதும் அவர் பெயிண்டர் ஆக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து பாண்டியனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.
English Summary
police visit to gowthami house