மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு - மருத்துவர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு.!!
case against six peoples for steal women kidny in uttar pradesh
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடந்தது. இருப்பினும், அவரது உடல்நிலை சரியாகாததால் கடந்த 2022-ம் ஆண்டு மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் அவரது இடது சிறுநீரகம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று முறையிட்டனர்.
அப்போது அங்குள்ள மருத்துவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன், போலி ஆவணம் ஒன்றை கொடுத்து அவரது இரண்டு சிறுநீரகங்களும் இருப்பதாக சாதித்தனர். அத்துடன் அந்தப் பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அந்தப் பெண் மீரட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
அதன் படி அந்த மருத்துவமனை இயக்குனரும், மருத்துவருமான சுனில் குப்தா மற்றும் அவரது மனைவி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுவது.
English Summary
case against six peoples for steal women kidny in uttar pradesh