மக்களிடையே ஆர்வத்தை தூண்டுகிறது பொன்னியின் செல்வன் - நடிகர் கார்த்தி பேட்டி..! - Seithipunal
Seithipunal


மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னணியின் செல்வம் திரைப்படத்தில், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். நாளை (30 ஆம் தேதி) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.  

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி, “மூன்று வருட உழைப்பிற்கு பலன் கிடைக்கும் தருணம் இது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும், செய்தியாளர்களாகிய நீங்கள் இப்படத்தைப் பற்றி மிக ஆழமாக கேள்விகள் கேட்டு இப்படத்திற்கான மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்.

பிற மாநிலங்களில் உள்ளவர்கள் போனியின் செல்வன், போனியின் செல்வம் என்று தெரிவித்தார்கள். ஆனால், இப்பொழுது போனியின் செல்வன் அல்ல பொன்னியின் செல்வன் கல்கி எழுதியது என்று எல்லோருக்கும் தெரிகிறது. அதுமட்டுமின்றி, பத்திரிகையாளர்களான நீங்கள் இந்த படம் குறித்து நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். அது மக்களிடையே இப்படம் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

மேலும், படம் குறித்த ஆர்வத்தோடு மட்டுமல்லாமல், நம் நாட்டு கலாச்சாரம், அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? எப்படி ஆட்சி நடத்தினார்கள்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. மற்ற மாநிலத்திற்கு செல்லும் போது சோழர்களின் வரலாற்றை கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். 

இன்று நிறைய பேர்களிடம் பொன்னியின் செல்வன் சென்று சேர்ந்துள்ளது. என்னுடைய நண்பர் ஒருவர் ட்ரைன்ல போகும்போது ஒரு போட்டோ எடுத்து அனுப்பினார். அந்த போட்டோவில், ஒரு நாலு பேராவது பொன்னியின் செல்வன் புத்தகத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.

ஏனென்றால் அந்த அளவுக்கு பொன்னியின் செல்வன் படம் மக்களிடையே ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. இன்னும் சில பேர் நாவலை தெரிந்து கொண்டு படத்தை பார்ப்பதற்காக புத்தகத்தை படிக்கிறார்கள். ஆக மொத்தத்தில் மக்கள் மத்தியில் வாசிப்பு அதிகரித்துள்ளது. 

மேலும் இப்படத்தில் பல நடிகர், நடிகையுடன் பணியாற்றியது ஒரு புது அனுபவமாக இருந்தது.  சோழர்கள் காலத்தில் இருந்த கலாச்சாரத்தை மிக ஆழமாக ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார் கல்கி. அதேபோல், மணிரத்னம் சார் காதல், அரசியல் என்ற எந்த மாதிரியான படத்தை இயக்கினாலும் அந்த காட்சியில் உயர்தரம் இருக்கும்.

இந்தப் படத்திலும் அந்த தரம் நிச்சயம் இருக்கும். கல்கி எழுத்து வடிவில் கொடுத்ததை, மணிரத்னம்  காட்சி வடிவில் நமக்கு கொடுத்துள்ளார். உங்களை போலவே நானும் அது எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ponniyin selvam movie actor karthi press meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->