மோசடி வழக்கு: பிரபல காமெடி நடிகருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம், தேவிபட்டினத்தை சேர்ந்த முனுசாமி என்பவருக்கு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ. 15 கோடி லோன் வாங்கி தருவதாக தெரிவித்து அவரிடம் ரூ. 14 லட்சத்தை அட்வான்ஸ் தொகையாக பெற்றுக் கொண்டுள்ளார். 

ஆனால் பவர் ஸ்டார் கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்றுக்கொண்ட ரூ. 14 லட்சத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இருந்ததால் முனியசாமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை பலமுறை வந்தும் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாததால் நடுவர் நீதிமன்ற நீதிபதி இன்று பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். 

இந்த பிடிவாரண்ட் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கு மாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இதுபோன்று பலரை ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் அவரை பிடிப்பதற்காக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

power star seenivasan Fraud case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->