ராதே ஷ்யாம் படத்திற்கு பிரபாஸ் வாங்கிய சம்பள விவரம்.! வாயடைத்து போன திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம்தான் ராதே ஷ்யாம். நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

வரும் மார்ச் 11ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் பொழுது படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர். 

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 175 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. பாகுபலி திரைப்படத்தை போல மிகப்பெரிய வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு சினிமா மூலம் பிரபலமடைந்த இருந்தாலும் கூட தற்போது அவர் பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பிரபாஸ் தான் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில் ராதேஷ்யாம் திரைப்படத்திற்காக பிரபாஸ் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக ஒரு தகவல் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prabhas salary For radheshyam movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->