பிரேம்ஜியின் காதலி இந்த பிரபல பாடகியா.?! விரைவில் கல்யாண அறிவிப்பு.?! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று பன்முகத்திறமையோடு விளங்கி வருபவர் தான் கங்கைஅமரன். இவருடைய மகன் தான் பிரேம்ஜி. இவரும் நடிகராகவும் மற்றும் இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார். 

இவருக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் முரட்டு சிங்கிள் என்று அடிக்கடி தெரிவிப்பர். பிரேம்ஜியின் தாயார் அண்மையில் காலமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கங்கை அமரன், "எனது மனைவி பிரேம்ஜிக்கு திருமண செய்ய மிகுந்த ஆசையில் இருகின்றார். 

இருப்பினும், பிரேம்ஜிதான் மறுத்துக் கொண்டே இருந்தார். அம்மா இறந்த பின் அவர் மிகவும் கஷ்டப்படுகின்றார்." என்று வருத்தம் தெரிவித்து இருந்தார். 

பிரேம்ஜி தற்போது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேம்ஜி அமரன், 'ஆதலால் காதல் செய்வீர்' மற்றும் 'கில்லாடி' ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய பாடகி வினைத்தாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது வினைத்தா பிரேம்ஜியுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premji loves singer vinaiththa


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->