நடிகை கஸ்தூரிக்கு அடுத்த சிக்கல்! லஞ்சமே வாங்காத தமிழக அரசு ஊழியர்கள் போர்க்கொடி! - Seithipunal
Seithipunal


நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி லஞ்சமே வாங்காத தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“அரசு ஊழியர்களின் சில பிரிவினர் அதிக அளவில் லஞ்சம் பெறுகின்றனர்” என நடிகை கஸ்தூரி அளித்த குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு ஊழியர்களை பொதுமக்கள் மத்தியில் தவறான முறையில் சித்தரிக்கும் வகையில் கஸ்தூரி கருத்து வெளியிட்டுள்ளார்" எனவும் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அவர் மீது தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn Govt revenue staff condemn to kasthuri shankar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->