அண்ணாமலை அரசியலுக்கு தகுதியில்லாதவர்!...எஸ்.வி.சேகர் தாக்கு!
Annamalai is unfit for politics sv shekhar attack
சென்னையில் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், எந்தக் கட்சி பிராமணர்களுக்கு சீட் கொடுக்கிறார்களோ அல்லது பிராமணர் நல வாரியம் ஆரம்பிப்பதாக அறிவிக்கிறார்களோ அது திமுகவாக இருந்தாலும் சரி, நான் திமுகவிற்காக பரப்புரை செய்வேன் என்று கூறினார்.
ஆனால் எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன் என்றும், நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. என் சமூகத்திற்காக பேசுவதாக தெரிவித்த அவர், எந்தவொரு காரணத்தையும் வைத்து அடுத்த சமூகத்தையோ, மதத்தையோ குறைத்து பேசுவது, அயோக்கியத்தனமான செயல் என்று தெரிவித்தார்.
மேலும், அண்ணாமலை போல் அரசியல் செய்தால் நாற்பதற்கு பூஜ்ஜியம்தான் எடுக்க முடியும் என்று கூறிய அவர், அண்ணாமலை பாஜக மாநில தலைவராக மட்டுமல்ல, அரசியலுக்கே தகுதியில்லாதவர் என்று விமர்சித்தார்.
தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த அவர், பாஜகவில் பிராமணர்களுக்கு இனப்படுகொலை தான் நடக்கிறது என்றும், பொதுவெளியில் பேசும்போது என்ன பேச வேண்டும் என்பதை விட என்ன பேசக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு போக வேண்டும் என்று கூறியுள்ளார்.
English Summary
Annamalai is unfit for politics sv shekhar attack