வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!...டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களம் கண்டனர்.

இதில், அமெரிக்காவில் உள்ள 538 இடங்களில் குடியரசு கட்சி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ட்ரம்ப் 248 வாக்குகள் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனை முன்னிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் அங்கு கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து அமெரிக்காவின் 47வது அதிபராக  ட்ரம்ப் பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி டிரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற எனது நண்பர் டிரம்பிற்கு வாழ்த்துகள் என்றும், உங்கள் முந்தைய ஆட்சியின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, ​​இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்களின் ஒத்துழைப்பை புதுப்பிப்பதற்கு நான் எதிர்நோக்குகிறேன்.

ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Historic victory pm modi congratulates trump


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->