கோல்டன் குளோப் விருது வாங்கிய 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு.!
prime minister modi wishes to RRR movie golden globe award
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
மேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றது.
சமீபத்தில் ஆஸ்கார் விருது நாமினேஷனிலும் இந்தப் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது.
இந்தப் படத்தில், எம்.எம்.கீரவாணி இசையமைத்த 'நாட்டு நாட்டு' பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அதன் படி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த விருதினை பெற்றனர்.
இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, "மிகவும் சிறப்பான சாதனை. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த விருது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் கதாநாயகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர், இயக்குனர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோரை டேக் செய்தும் தன்னுடைய பாரட்டுக்களை தெரிவித்துள்ளார்.
English Summary
prime minister modi wishes to RRR movie golden globe award