தப்பித்த எஸ்கே, 'பிரின்ஸ்' திரைப்பட தோல்விக்கு கரணம் இதுதானாம்!
Prince Movie Flop issue
சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்த்து, படுதோல்வியடைந்த நடிகர் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படத்தின் தோல்விக்கு காரணம், படத்தின் இயக்குனர் தான் என்று தயாரிப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெலுங்கில் 'ஜதி ரத்னாலு' என்ற நகைச்சுவை வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் அனுதீப். இவரை தமிழுக்கு கொண்டுவந்த சிவகார்த்திகேயன், அனுதீப் இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்ஷன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா நடித்திருந்தும், தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தும் படம் தோல்வியடைந்தது படக்குழுவிற்க்கே சற்று அதிர்ச்சிதான்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் "கிரிஞ் மூவி, பூமர் அங்கிள்" என்றல்லாம் கடுமையான விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், படத்தில் தோல்வி குறித்து, பேசிய பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவிக்கையில், “ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நல்ல கதை முக்கியமான ஒன்று.
ஆனால், அந்த படம் வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் அதற்கு படத்தின் இயக்குநர் தான் காரணம். சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படம் தோல்வியடைந்ததற்கும் அப்படத்தின் இயக்குநரே காரணம்" என்று ஒரே போடாக போட்டார்.
அப்ப கதை கேட்டு நடித்த எஸ்கே தப்பித்தார்.