பெரியார் பேசியதை பொது வெளியில் சொன்னால் ரொம்ப கேவலமா இருக்கும் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
BJP Annamalai periyar Seeman Naam Thamizhar katchi
பெரியார் குறித்து சீமான் பேசியது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது, இதனால் பல இடங்களில் சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த விவகாரத்தில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சார்பில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பெரியார் குறித்து சீமான் கூறியது சரிதான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை தெரிவிக்கையில், "சீமான் கூறிய கருத்துக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. பெரியார் எப்போது, எங்கு இதை பேசினார் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை இன்று வெளியிடுகிறேன். ஆனால், பெரியார் கூறியதை பொதுவெளியில் தெரிவிக்க நேர்ந்தால் அது நாகரீகமாக இருக்காது," என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai periyar Seeman Naam Thamizhar katchi