"பிகினி போட்டாலும் அது எங்க இஷ்டம்." பிரியங்கா காந்தியின் சரவெடி கருத்து.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக பி.யு அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, முஸ்லிம் மாணவிகள் இவர்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.

பின்னர் அம்பேத்கர் ஆதரவாளர்கள் நீல துண்டு அணிந்து ஜெய்பீம் என்று முழக்கம் கொடுக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக, அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. ஹிஜாப் விவகாரத்தை எதிர்த்தும், ஆதரித்தும் கல்லூரி மாணவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

எனவே, அங்கு போலீசார் குவிக்கப்பட்டு மிகவும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விஷயங்கள் குறித்து அறிந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தற்போது இந்த விஷயம் குறித்து ஒரு கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில், "பெண்கள் ஜீன்ஸ், ஹிஜாப், பிகினி என்று எது அணிவது என்றாலும் பெண்களின் உரிமை. இது அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமை. எனவே, பெண்களை அடக்குமுறைக்கு உள்ளாக்க வேண்டாம்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priyanka ganthi about hijab issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->