தலைநகர் டெல்லியில் குளிரால் 474 உயிரிழப்பு; விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் கடந்த நவம்பர் 15, 2024 முதல் ஜனவரி 10, 2025 வரையான 56 நாட்களில் 474 பேர் குளிரால் இறந்ததாக ஒரு தொண்டு தொண்டு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளது. 

வீடற்று சாலையோரத்தில் தங்கியவர்கள் இவ்வாறு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 

வீடற்றவர்களின் நலனுக்காகப் பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஹோலிஸ்டிக் டெவலப்மென்ட் (CHD) தொண்டு நிறுவனம் இதனை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

டெல்லியில் சாலையோரம் தங்கியவர்களுக்கு கம்பளி போர்வைகள், சூடான தண்ணீர், மறைக்கப்பட்ட தங்குமிடங்கள் இல்லாததால் இந்த உயிர்ப்பலிகள் ஏற்பட்டதாக அந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தெருக்களில் வசிக்கும் மக்கள் சுவாச நோய்த்தொற்றுகள், தோல் நோய்கள், மூட்டுவலி வெடிப்புகள் மற்றும் மன ஆரோக்கியம் மோசமடைதல் உள்ளிட்ட ஏராளமான சுகாதார சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதையும் CHD அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி தலைமைச் செயலாளர் தர்மேந்திரா மற்றும் டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியத்தின் (DUSIB) தலைமை நிர்வாக அதிகாரி ரவி தவான் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில், CHD காவல்துறை புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, நகரத்தில் உள்ள "அடையாளம் தெரியாத இறந்த உடல்களில்" 80 சதவீதம் வீடற்ற நபர்களின் உடல்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம், இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக, டெல்லி அரசு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

474 homeless people died due to winter exposure in Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->