அனிருத்துக்கு கார் பரிசளித்த ஜெயிலர் பட தயாரிப்பாளர்.! - Seithipunal
Seithipunal


அனிருத்துக்கு கார் பரிசளித்த ஜெயிலர் பட தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதுவரைக்கும் ரூ. 600 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து, தனது லாபத்திலிருந்து தான் விருப்பப்பட்ட தொகையை அவருக்கு காசோலை மூலம் தந்ததுடன் ரூ.1.64 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ரக சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்தார். 

இதேபோல் படத்தின் இயக்குநர் நெல்சனுக்கும் கார் ஒன்றை பரிசாக படத்தின் வழங்கினார். இதற்கு ரசிகர்கள் இசையமைப்பாளர் அனிருத்துக்கு ஏதுமில்லையா? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இசையமைப்பாளர் அனிருத்துக்கு காசோலையை அளித்து, போர்ச்சே காரை பரிசளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

producer kalanithi maran gift car to music director aniruth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->