மீண்டும் "ஆளவந்தான்".. தயாரிப்பாளர் தானுவின் மாஸ் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சமீப காலமாக பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் ட்ரெண்ட் தொடர்கிறது. நடிகர் ரஜினியின் பாபா திரைப்படம் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு அதில் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு கடந்த மாதம் ரஜினியின் பிறந்தநாளுக்கு வெளியானது. புது படங்களுக்கு நிகராக இந்த திரைப்படம் குறிப்பிட்ட அளவு வசூலை ஈட்டியது.

அந்தவகையில் தற்பொழுது நடிகர் கமலஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படம் ரீ-ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு கலைப்புலி தானு தயாரிப்பில் இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கண்ணா இயக்கியிருந்தார். சும்மா ரூ.400 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் அப்பொழுது படுதோல்வியை சந்தித்தது.

இந்த திரைப்படம் தற்பொழுது டிஜிட்டல் முறையில் மெருகேற்றி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக தயாரிப்பாளர் தானு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "விரைவில் திரையரங்களில் உங்கள் உள்ளங்களை ஆள வருகிறான்" எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உலகம் எங்கும் ஆயிரம் திரையரங்குகளில் ஆளவந்தான் திரைப்படம் வெளியிட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரம்மாண்ட ரீ-ரிலிசுக்கு ஆளவந்தான் திரைப்படம் தயாராகி வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Producer thanu announced alavandhan movie re release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->