பிரபாஸின் ‘ப்ராஜெக்ட் K’.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர்தான் பிரபாஸ். இவரது நடிப்பில் ஸ்பிரிட், சலார் மற்றும் ப்ராஜெக்ட் K உள்ளிட்ட மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. நாக் அஷ்வின் இயக்கத்தில், உருவாகும் பிரபாஸின் 21வது திரைப்படம் தான் ‘ப்ராஜெக்ட் K’.

இந்த திரைப்படத்தை வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படமானது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்கின்றார். 

இதில், வில்லனாக உலக நாயகன் கமலஹாசன் நடிக்கிறார். அத்துடன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை திஷா பதானி மற்றும் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு மிக்கி.ஜே.மேயர் இசையமைக்கின்றார், இதனை டேனி சஞ்செஸ் லோபெஸ் ஒளிப்பதிவு செய்கின்றார். 

இந்த திரைப்படம் சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் தயாராகின்றது. இது 2050-இல் நடக்கும் நிகழ்வை போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் GLIMPSE வரும் ஜூலை 21-ல் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Project k prabhas movie update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->