''புஷ்பா 2'' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா'. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ''புஷ்பா 2'' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் ''புஷ்பா 2'' திரைப்படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும் 'புஷ்பா 2' திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pushpa 2 Movie First Single Release Update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->