புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் - மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு..! - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் நடனமாட நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அவர் நடனமாடும் அந்த பாடலுக்கு 'கிஸ்சிக்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதாவது, புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் வரும் 17ம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என்றும் இதன் வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pushpa 2 movie team announce trailer release date


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->