அல்லு அர்ஜுனின் புஷ்பா - 2 படத்தின் முக்கிய அப்டேட்.. நாளை காலை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்த திரைப்படம் தான் புஷ்பா. இதில் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கிய நிலையில், படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 5 மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார்.

இந்த படத்தில் 'ஊ சொல்றியா' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில், நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பட்டி தொட்டி எங்கும் கலக்கினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது  புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இதுவரை புஷ்பா 2 படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகததால் பொது இடங்களில் படக்குழுவினரிடம் புஷ்பா 2 திரைப்படத்தின் அப்டேட் குறித்து தொந்தரவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் முக்கிய அப்டேட்டை நாளை காலை 11.07 அறிவிக்க உள்ளதாக படக்குழு  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pushpa 2 movie update on tomorrow morning


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->