இணையத்தில் படு வைரலாகும்.. புஷ்பா 2-வின் பூஜை புகைப்படங்கள்..!
Pushpa 2 pooja Photo viral
புஷ்பா இரண்டாம் பாகம் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்த திரைப்படம் தான் புஷ்பா. இதில் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கிய நிலையில், இதில் நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருப்பார். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதுபோல ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி பாடலும் மிகவும் ஸ்பெஷலாக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இன்று படப்பூஜை நடைபெற்ற நிலையில், அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
Pushpa 2 pooja Photo viral