எந்த படமும் செய்யாத சாதனை செய்த புஷ்பா.? எல்லாம் சமந்தாவுக்காக தானா.?! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான திரைப்படம் தான் புஷ்பா. இதில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சாதாரண மர வெட்டியாக இருந்த ஹீரோ பின்னாளில் செம்மரக் கடத்தல் பிசினஸிற்க்குள் எப்படி செல்கிறார் என்பது தான் புஷ்பா கதையாக இருக்கும்.

இந்தப்படம் கொரோனா லாக்டவுனுக்கு பின் வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்ற முதல் படமாக இருந்தது. ரூபாய் 350 கோடி வரை வசூல் செய்ததாக கூற்ப்பட்டது. இந்த படத்தில் ஊம் சொல்றியா பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார்.

இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தது. மேலும், ராஷ்மிகா நடனமாடிய சாமி சாமி பாடலும் மிகப் பிரபலமான பாடலாகும். 

இந்நிலையில், தற்போது புஷ்பாவின் ஆல்பம்பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இது குறித்து அல்லு அர்ஜுன் புகைப்படத்துடன் தனியார் நாளிதழ் ஒன்று அட்டைப்படம் வெளியிட்டு பெருமைபடுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pushpa album makes 5m Viewers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->