ஜாவானில்.. களமிறக்கப்படும் புஷ்பா.. அட்லீயின் பிளான் தான் என்ன.?!  - Seithipunal
Seithipunal


தற்போது நடிகர் ஷாருக்கான் நடிக்கின்ற ஜாவான் திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகின்றார். முதன்முதலாக ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் அட்லி களமிறங்கி இருக்கிறார். 

சில மாதங்களுக்கு முன் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி நடந்தது. புனேவில் நடந்த இந்த ஷூட்டிங்கில் நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த திரைப்படத்திற்காக இயக்குனர் அட்லி மும்பையில் மூன்று வருடங்களுக்கும் மேலாக தங்கி வருகின்றார்.

இத்தகைய நிலையில் பதான் பட வேலைகளை முடித்த ஷாருக்கான் தற்போது, ஜாவான் படத்தில் முழு கவனத்துடன் இறங்கியுள்ளார். 14 கோடி அளவில் செலவு செய்து இந்த ஜாவான் படத்தை எடுத்து வருகின்றனர். 

அவரை தொடர்ந்து, தற்பொழுது உச்ச நடிகராகவுள்ள நடிகர் அல்லு அர்ஜுன் இந்த ஜாவான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அல்லு அர்ஜுன் தற்பொழுது புஷ்பா 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே புஷ்பராஜ் கதாப்பாத்திரத்தை தான் இதில் கெஸ்ட் ரோலாக காட்ட அட்லீ திட்டமிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pushpa Role In Jawan movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->