ராகவா லாரன்சுடன் நடிக்க இருக்கும் நயன்தாரா - விரைவில் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ragava lawrance and nayanthara join new movie
தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், வித்யாசாகர் இசையில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த படம் வெளியாகிய ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில், கதாநாயகனாக நடிகர் லாரன்சும், கதாநாயகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.
சந்திரமுகி 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஜிகிர்தண்டா 2, அதிகாரம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், ப்ரியா பவானி ஷங்கருடன் நடித்திருக்கும் இவருடைய `ருத்ரன் திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையே ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றிற்கு அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
English Summary
ragava lawrance and nayanthara join new movie