அனிருத்தை ஒதுக்கிய ரஜினி குடும்பத்தினர் - இதுதான் காரணமா.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ‘3’ படம் மூலமாகத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அந்தப் படத்திற்கு பின்பு இளைய தலைமுறையின் ப்ளேலிஸ்டில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறினார். இந்த நிலையில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா, செளந்தர்யா உள்ளிட்ட மூவரும் தங்கள் படங்களில் தொடர்ந்து அனிருத்தைப் புறக்கணிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குனர் ஐஸ்வர்யா தன்னுடைய ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு ஜிவி பிரகாஷூம், டி50 படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான், டி51 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் இசையமைக்கின்றனர். அதுபோலவே, தன்னுடைய ‘லால் சலாம்’ படத்திற்கும் அனிருத்தைத் தவிர்த்து ரஹ்மான் இசையைப் பயன்படுத்தியுள்ளார். 

இதேபோல், ரஜினியின் இளையமகளான செளந்தர்யாவும் இதற்கு முன்பு இயக்கிய ‘விஐபி2’ படத்திற்கு ஷான் ரோல்டனை இசையமைப்பாளராகப் பயன்படுத்தியுள்ளார். தற்போது, லாரன்ஸ் வைத்து அவர் இயக்கும் புதிய படத்திற்கு ரஹ்மான் அல்லது ஜிவி பிரகாஷ் இசை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் கைவசம் ‘இந்தியன்2’, ‘வேட்டையன்’, ‘விடாமுயற்சி’, ‘தேவரா’ உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளது. இதனாலேயே, இவர்களது படங்களுக்கு இசையமைக்க நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini family avoide music director aniruth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->