வெளியானது ரஜினியின் வேட்டையன்!...திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்!
Rajini vettaiyan released fans celebrate in theatres
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம், உலகமெங்கும் இன்று வெளியாகியது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 170-வது படமான 'வேட்டையன்' திரைப்படத்தை ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் நடிகர் ரஜினியுடன், நடிகர்கள் அமிதாப்பச்சன், பகத் பாசில் மற்றும் நடிகைகள் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை,மும்பை, திருவனந்தபுரம், ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்றது.
இந்தநிலையில் இந்த திரைப்படம், உலகமெங்கும் இன்று வெளியாகியது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்கில் காலை முதலே சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டது. காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சி தொடங்கிய நிலையில், ரசிகர்கள் அதிகாலை முதலே பல திரையரங்குகளில் கொண்டாடினர்.
தமிழக திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் வெளியாக இருந்தநிலையில், இன்று ஒருநாள் கூடுதலாக ஒரு சிறப்புக்காட்சி ( காலை 9 மணி) திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rajini vettaiyan released fans celebrate in theatres