ரஜினியின் 170வது படத்தின் அசத்தல் அப்டேட்.. தலைப்பு என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது திரைப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினியின் 170வது திரைப்படத்தை, ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக உள்ளது. மேலும், போலி என்கவுண்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார்.

அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல் அதிகாரியாக நடிக்கிறார். இதனையடுத்து இந்தப் படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் திருவனந்தபுரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் ஞானவேல் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், நானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் 170 வது திரைப்படத்திற்கு 'வேட்டையன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth in 170 movie update and title


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->