காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்.. காரணம் தெரியுமா?.. இதுதான் விஷயமாம்.!
Rajinikanth thanks to Police
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, நேற்று சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்திக் உட்பட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழகத்தின் வரலாறு, கண்கவர் கலை நிகழ்ச்சிகள், கொடி அணிவகுப்பு, இசைக்கச்சேரி நடந்தது.
இதில், இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தின் பியானோ வாசிப்பு வெளிநாட்டினரையும் உற்சாகமடைய வைத்தது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் தொடக்கத்தில், இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாக பிரதமர் முதல் முதல்வர் வரை தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்ற நேரு அரங்கத்திற்கு தன்னை பாதுகாப்பாக அழைத்துச்சென்று, மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த காவல் அதிகாரிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அவர்களை நேரில் அழைத்து தன்னுடன் புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Rajinikanth thanks to Police