மத்திய பட்ஜெட் - 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி ரத்து.! - Seithipunal
Seithipunal


2025-26 நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். எட்டாவது முறையாக அவ இந்தப் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது:-

* லித்தியம் - ஐயோன் பேட்டரிகளுக்கான சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது.

* கப்பல் கட்டுமானத்திற்கான சலுகைகள் மேலும் 10 ஆண்டுகளுக்கு தொடரும்.

* ஏற்றுமதிக்கான 7 வரிகள் ரத்து செய்யப்படுகிறது.

* டிவி பேனல் இறக்குமதி வரி 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

* 12 வகையான அரிய வகை கனிமங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

* 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக ரத்து.

* நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக உள்ளது.

* ஏற்றுமதிக்கான வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

* 82 பொருட்களுக்கு செஸ் அல்லது மதிப்பு கூட்டு வரியில் ஒன்று மட்டுமே வசூலிக்கப்படும்.

* கடல்சார்ந்த பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.

* நாடு முழுவதும் புதிதாக 5 அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

36 custom tax cancelled to 36 medicines in budget 2025


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->