ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!.....எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 170-வது படமான 'வேட்டையன்' திரைப்படத்தை  ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் நடிகர் ரஜினியுடன், நடிகர்கள் அமிதாப்பச்சன், பகத் பாசில் மற்றும் நடிகைகள் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னை,மும்பை, திருவனந்தபுரம், ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்றது.

இந்தநிலையில், வேட்டையன் படத்தின் புதிய அப்டேட்  இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி லைகா நிறுவனம் இன்று  புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால்,  ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth vettaiyan release date announcement know when


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->