புஷ்பா கெட்டப்பில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.! வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் உம் சொல்றியா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தப் படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. கேஜிஎப் திரைப்படம் அளவிற்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் ஒரு முறை பார்க்கலாம் என்ற ரீதியில்தான் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால், வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் புஷ்பா கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ravindra Jadeja in Pushpa getup


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->